Saturday, December 24, 2016

வாழ்க்கைப் பயணத்தில் 
எனக்குப் பிடித்த 
அத்தனையும் 
என்னை விட்டும் விலகி 
விரண்டோடிய போதும் 
ஏனோ இந்தக் 
கண்ணீர் மட்டும் 
எனக்குப் 
பிடிக்காத போதும் 
விடாமல் என்னைப் 
பின் தொடர்கிறது ..
ஐயகோ நான் 
என் செய்வேன் ?
வாழ வேண்டும் 
என்ற ஆசை 
பிறந்ததே 
உனை பார்த்த 
பின்புதானே ...
ஆனால் நீயோ 
வாழ விடாமல் 
தடுக்கிறாயே 
ஏனடா இந்த 
வெறி உனக்கு !!!

அன்பை தந்தாய்
பரிவுடன் நோக்கி
பாசத்தைப்
பொழிந்தாய்
புன்னகையோடு
சந்தோசம் தந்தாய்
புன்னகைக்கவும்
செய்தாய்
அது அந்தக் காலம்
நெஞ்சில்
நெருப்பையும்
பார்வையில்
வெறுப்பையும்
வார்த்தையில்
வலியையும்
என் விழிகளிலே
கண்ணீரையும்
தருகிறாய்
இது இந்தக் காலம்
என் அன்பே
ஏன் இந்த மாற்றம்
பேதையிவள்
இழைத்திட்ட
குற்றம்தான் என்ன ?
சொல்லி விடு
என்னை நான்
திருத்திக் கொள்கிறேன்
இல்லையேல்
கொன்று எனை
மண்ணோடு
கலந்து விடு
சந்தோசிக்கிறேன்
நான்
அப்போதேனும் .....!!!Cool

எதிர்பார்ப்பின்றி
எதிர் பாராமல் எம்
வாழ்வில் வந்து
எம் மனதில்
என்றும் நிலைக்கும்
நித்திய உறவே
நட்பு !

உள்ளத்தின் 
வலியால்
இதயமதில் 
வலிந்தோடும்
குறுதியின் 
வெளிப்பாடே
கண்ணீராகும் ...
மலர்களோடு
மலராக நானும்
அமர்ந்திருப்பது
மலர்களை
ரசிக்கவல்ல...
பொன் வண்டே
உன்
வருகைக்காக !


விளையாட்டாய்
சண்டையிட
அன்பாய்
அரவணைக்க
எப்போதும்
என்னுடன்
நீ வேண்டும் ,

உண்மையான அன்பு
இல்லாத இடத்தில்
தேவைக்கதிகம்
உரிமை எடுத்தால்
சிதையுண்டு போகும்
இதயமடி அதைப்
புணரமைக்க வழிகள்
ஏதும் இல்லையடி

மதி கெட்டுத்
தரி கெட்டுத்
தழும்புது 
நெஞ்சம்
மிதிபட்டு 
மிதி பட்டு
சிதையுண்டு
நொறுங்குது 
நெஞ்சம்
நொடி கூட 
மறவாமல்
வாழுது உன் எண்ணம்
ஓயாமல் 
குத்தி எனை
கொல்லுது
உன் மௌனம் ..
தவறாது தினம்தோறும்
அனுப்பிடு 
நீயும்
குறுந்தகவல் ...
தவறிடின் 
வந்திடும்
உனக்கோர் 
தந்திச் செய்தி
அதுதான் இவளின்
மரணச் செய்தி ...
நித்தமும் நான்

இறைவனை 
வேண்டும்
நித்திய உறவு
நீதானடா...
நித்திரை கூட
எதிரியானது
மௌனம் கூட
கவிதையானது
தனிமை மட்டும்
போதுமடா எனக்கு
உன் நினைவுகளை
மீட்டுப்பார்க்க
வேறேதும் 
வேண்டாம்
நீ மட்டும் 
போதுமடா
என் ஆயுள் 
முழுவதும்
நான் 
மகிழ்வாய்
வாழ்ந்திட.....

உள்ளமெனும்
வீட்டினிலே
சொல்ல முடியா
ஓர் எண்ணமதை
செவ்வனே 
மறைத்து
நானும்
பூட்டி வைத்தேன்
செம்மையாய் பேசி
பேதையிவள்
நெஞ்சமதை
திருடிச் சென்றவன்
இன்று எங்கே..?
கயவனே வந்தென்
இதயமதைத் திருப்பி
என்னிடமே
தந்துவிடு
காதலின் புனிதம்
சொல்லித் தந்தவரே
காதலியின் உயிரை
காலன் பறித்துச்
செல்வதை
காண ஏனடா 
செல்லம்
இத்தனை 
ஆர்வமுனக்கு
காலன்
அழைக்கும் முன்னே
இறந்துவிட்டேன்
 நான்
நீயெனை
சந்தேகித்த போதே ..
சிந்திக்கிறேன்
 இப்போது
நீயெனக்கு
வேண்டுமா
வேண்டாமா ?


நித்தமும் உன்னை
எமாற்றுபாவள்
தினமும்
பொய்யுரைப்பவள்
உன்னை வஞ்சிப்பவள்...
உன் மனதைப்
புண் படுத்துபவலள்
உன்னை
கொல்லாமல் கொல்லும்
இந்தக் கொடியவளின்
காதல் உனக்குத்
தேவைதானா?
ஆதலால் அன்பே எனை
மன்னித்து மறந்திடு

காலம்
உள்ள போது
தூங்கிக்கொள்
தொலைத்த பின் தேடாதே ....
தொலைந்து விட்ட
நிம்மதியான 
தூக்கம்
நம்மைத் 
தூர நின்று
வேடிக்கை 
பார்க்கும்
நம்மைப்
பித்தனாக்கும் 
வரை ....
பாவம் 
பார்க்கவேனும்
பக்கத்தில் வராது மீண்டும்
என் 
தொலைந்து போன
தூக்கத்தைப் போல .....

இது வரை
miss பண்ணிய
அணைத்தையும் விட
இனி miss பண்ணப்
போகிற விடயம்
பேரிழப்பு
எனக்கல்ல
என்னைப்
பிடித்தவர்களுக்கு

என்ன தவறு
நான் செய்திட்டேன்
புரியவில்லை இன்னும்
உன்னை நேசித்தது தப்பா
நேசித்த உனை
மறக்க முடியாமல்
தவித்து உனக்காகவே
வாழ்வது தப்பா....நீ 

சந்தோசிதிருக்க வேண்டி
என் அத்தனை
கஷ்ட்டங்களையும்
மறைத்து
உள்ளத்துள் அழுது
உதட்டால் 
புன்னகைக்கிறேனே அதுவா..

இல்லையேல் ஓர்
இம்மியளவும் உன்
நினைவின்றி
இதயமது துடிக்க மறந்து
உன் கனவுகளை
விழிகளுள் தேக்கி வைத்து
வரும் கண்ணீர் கனவுகளை
அழித்திடுமோ இல்லை உன்
கண்களும் கலங்கிடுமோ
என்றஞ்சி உள்ளக்
குமுறல்களை
அடக்கியாழ்வது தப்பா..

என் ஒட்டுமொத்த
இன்பங்களையும்
ஒத்தி வைத்து.. உன்னிடம்
வரும் தவமிருக்கிறேனே
அதுதான் தப்பா
ஏனிந்த முடிவெடுத்தாய்
என் வாழ்வில் நீயும்
வந்ததேனடா
அன்பை நீயும்
பொழிந்ததேனடா 

சொல்லம்புகளில் எனை
தாக்கியபோதேல்லாம் 
உள்ளம்
உடைந்து போனாலும் என்
விழித்தடாகத்து நீரை
வலியவிடாமல்
மனக் காயங்களை மறைத்து
இதல் திறந்து சிரித்து நீ
சந்தோசித்திருக்குமாழகை
ரசித்தது தப்பா... 
 
இப்போதேனும்
சொல்லிவிடு என்னுயிரே
பேதையிவள் செய்திட்ட
குற்றமென்னவென்று..
எனை நான்
சீர்திருத்திக் கொள்கிறேன்
எனக்காக அல்ல...நீ
சந்தோசித்திருக்க.....
மொட்டாகி பூவாகி

செவ்விதழ்கள்
 அடுக்காய்
விரித்து சிரித்து
அழகின் வடிவாய்
மணங்கமழும் 
மனங்கவர்
சிவப்பு ரோஜாவே ,....!
ஏதோ சோகம் 
உன்னில்
பேதையிவள் 
காண்கிறேன்...
அது
முற்களின் 
நடுவே நீ
பூதுக்கிடப்பதாலா ...?
கவலை 
வேண்டாம்
சந்தோசித்திரு ..
அந்த 
முற்கள் காத்திடும்
உன்னை உன்
அன்னையவள் போல
சிவப்பு ரோஜாவே ....!
அழுகின்ற
மனதும்
சிரிக்கின்ற
உதடும்
என்
பொக்கிஷங்கள் ...
சோகங்களை
மறைத்து
மௌனம்
காப்பேனே
அன்றி
பொய்யுரைக்க
மனம்
எண்ணவில்லையடா
ஒருபோதும் ...
சந்தேகிக்காதே...
சமாதியில்லா
நடைப் பிணம் நான்!
நெஞ்சு நிறைய
காதலுடன்
விழிகளில் கனவுகள்
பலவும் சுமந்து
காயங்கள் பல தாங்கி
காத்திருக்கிறேன் ...
ரணங்களுக்கு
ஒளடதமாய்
என்றோ ஓர் நாள்
நீ வருவாயென ...
வந்துவிடு
காத்திருப்பேன்
நீ வரும் வரையில்

அழகாய்
புன்னகைத்து
நளினமாய்
நடைபயின்று
துன்பமே
உணராமல்
சந்தோசம்
மட்டுமே
அனுபவிக்க
சின்னவளாகவே
சிட்டு நானும்
இருந்துவிட
கூடாதா?
கண்ணாடியில்
தாஜ்மஹாலைக்
கட்டிய நீ
உடைத்துவிடாதே
துகள்களாக ..
என் இதயத்தை
உடைத்தது போல

மழை வந்ததும்
மண்
வாசனை வந்து
காணாமல்
போனது போல்
எங்கிருந்தோ வந்த
உன் அன்பும்
வந்த நொடியே
மறைந்து போன
மாயம்
என்னவோ...?

சித்திரப் பதுமை
நீயடி
உன்னை விட
அழகி இல்லையடி
என்றெல்லாம்
நீ எனை
வர்ணிப்பதை விட
"போடி லூசுன்னு"
செல்லமாய் நீ
திட்டுவதில் தான்
எத்தனை இன்பம்...
தங்கமே முத்தே
எனக்கு நீ
வேண்டுமென
நீ கொஞ்சியபோதே
எனக்கு
புரியாமல் போனது
உனக்கு வேண்டியது
என் தங்கமும்
முத்தும் தானென்று.

என்னதான்
பொறுமையாக
இருந்தாலும்
சில 

அன்பானவர்களின்
கடுமையான
வார்த்தைகள்

 இதயத்தை
ரணமாக்கும் போது
காட்டாறு போல
கண்ணீர் கரை
புரள்வதை
கட்டுப்படுத்த
முடியவில்லையே.....!

தனிமையில்
தவமிருக்கிறேன்
பிறர் நிழலும் 
படாமல்
உன் நிழலும் 
தீண்டாமல்
ஏக பத்தினியாய்
தவி(கா)த்திருக்கிறேன் ...
என்றோ ஓர் நாள்
உன் நிழலில்
இளைப்பாறிட அல்ல
உன் பாதத்தடியில்
சமாதியாக !!!

ஆசையோடு 
பேச வந்தேன்
வார்த்தைக்குப் 
பதில்
கண்ணீர் மட்டுமே
அருவியாய் ஓடி
கண்களை நனைத்தது ,,
என்ன சொல்வேன் 
நானும்
வேதனையில் 
துவழுது
என்னுள்ளம்,, 
இக்கணமே
வெடித்துச்
சிதறுவதைப் போல் வலிக்குதடா
என்னுள்ளம்...
என்னை விட நீ
துடிப்பது தெரியுமாடா
எனக்கு..என்னென்று
சொல்வேன் 
என் மன
வேதனைக
ள்,,,
ஒன்றல்ல
இரண்டல்ல ஆயிரம்
கனவுகளைப் பூட்டி
வைத்திருக்கிறேன் என்
இதயப் பெட்டகத்துள் ,,,
ஆனாலும் அன்பே என்
ஆசைக்கு உன் வாழ்வை
பலியாக்கிட
உடன்படவில்லை
என் உள்ளம் ... நீ
சந்தோசித்திருக்கனும்..
அதைக் கண்ட பின்னே
நானும் பூலோகம்
கடந்து மேலோகம்
செல்லனும்...
பக்கத்தில் வந்து
சந்தோசப்படுத்துகிறாய்
advance ஆக
கம்பி நீட்டி விட
மாட்டாயே
climax ஆக?
மனமெலாம்
சுமைகளும் 

வலிகளும்
ஆட்டிப்படைக்கும்

 போது
கண்ணீர்த்
துளிகளையேனும்
சுதந்திரமாய்
சிந்திட முடியாத
துர்ப்பாக்கிய நிலை
ஏன் இந்த
பெண்மைக்கு மட்டும்?
தாயின் மனம் குளிர்ந்தால்  சுவர்க்கமத்தை மறுமையில் மட்டுமல்ல
இம்மையிலும் காணலாம் ..உன் தாயவளை சந்தோசப் படுத்திப் பார்
சந்தோசங்கள் யாவும்தானே பெருகிடும் ...
தூங்குவதைப்போல்
பாசாங்கு 

செய்கிறாய்
என்றல்லவா
எண்ணினேன்
ஆனால் நீ
நிரந்தரமாகவே
தூங்கிப் 

போனதேனடி?
பிறக்காமல் நானும்
போயிருந்தால்
இறக்காமல் போய்
இருக்கும் என்னிதயம்
என்னவனின் பிரிவு
கண்டு .....

யாவர்க்கும்
 மரணம்
ஒரு முறை தானடா ..
எனக்கோ அது
அனுதினம் ஏனடா?

நடைப்பிணமாய்க்
கிடந்தேனடா
இதுவரை ..எனக்கு
இந்த நிலை தொடர்வது
எதுவரை?  

உன்னைப்
பிரிந்ததும்
இறந்து விட்டேன்
நானடா.. இன்று
இறந்தவள் பேசுகிறேன் ...

என் உயிரை மீட்க
வருவாயா இல்லை
சமாதியை தரிசித்து
அனுதாபம் செலுத்திட
வருவாயா? 

இவை இரண்டில் எது
நடந்தாலும் மீளாது
என் உயிரடா.
ஏனெனில் இப்போது
உன்னுடன் 
இறந்தவள்
பேசுகிறேன் ,,,

உண்மையான
காதல்னா
என்னனு தெரியாம
ஒன்ன விட ஒன்னு
better னு தெரிஞ்சா
அத select
பண்ணுறவங்களுக்கு
பாதிக்கப்பட்டவர்
வலி
என்னனு என்றோ
ஒரு நாள்
அவர்களுக்குப்
பிடித்தவர்கள்
அவர்களை விட
வேறொருவர் better
என்று
அவர்களை விட்டு
செல்லும் போது
நிச்சயமாய் புரியும்
காதலைக்
கற்றுதந்த
ஆசானே
காதல் பொய்யென்று
சொல்லலாமா ?
நீயே என்
உயிரென்றாள்
உயிரை தூக்கி
எறியலாமா ?
அன்பே நம்
நிழல் கூட
நம்மில் பட்டதில்லை
நிஜம் இதயத்துள்
இருப்பதால்
அந்த இதயமே
சுக்கு நூறாய்
ஆனபின்னே
நிஜத்துக்குஅங்கே
என்ன வேலை ?

உரிமையில்லாத
அன்புக்காக
ஏங்குகிறேன் ...
உரிமையோடு
மனம் விட்டுப்பேச
முடியாமல் ...
உரிமையை
தட்டிப்பறிக்கவும்
சக்தியற்றவளாய் ... :(

கற்பனைகளையும்
கனவுகளையும்
பிசைந்து நானும்
கட்டி வைத்த
வாழ்க்கை எனும்
நாடக மேடை
காதலெனும்
ஒலி பெருக்கியின்
துணையுடன் 
முழங்கிட
அன்பு மொழிகள் 
ரீங்காரமிட
நாயகனாய் நீயும்
நாயகியாய் நானும்
நடிக்க இன்பமயமான
காதல் கதை தொடர
அதன் 
உச்ச கட்டம் இப்படி
துன்பகரமாய்
அமையப்போவதை
உணராத நாயகி
திறமையாய் நடிக்க
தீப்பிளம்பென
வந்த வார்த்தைகள்
இதயத்தை சிதைத்து
காயப் படுத்த ...
நாயகியோ
இடி விழுந்த 
உணர்வோடு
செய்வதறியாது
 திகைக்க
பிரிவிலே முடிந்தது
 நாடகம் ..
பார்வையாளருக்குப்
புரியவில்லை
நாடகத்தின் அர்த்தம் ...
நாயகியின் 
இதயத்தில்
கசிந்ததோ ரத்தம்
அந்தோ பரிதபம்
நாயகனும் நாயகியும்
மேடையில்
பிரிந்து சென்றதோ
இரு துருவம் ...

ஒற்றை ரோஜாப்
பரிமாற்றம் மட்டும்
அன்பைச்
சொல்லாது
நம் கண்களின்
பரிபாசையும்
சொல்லிடுமே .....
அதை புரிந்து
கொண்டாலே
இதயம்
மகிழ்ந்திடுமே

உயிர் மூச்சாய்
இதயத் துடிப்பாய்
விழிகளின் பார்வையாய்
உடலின் அசைவாய்
கனவில் நிழலாய்
நிஜத்தில் காதலனாய்
மனதில் ஒளியாய்
செவிகளின் ஒலியாய்
இதழ்களின் மொழியாய்
என் கவிக்கு கருவாய்
நீ ஏனடா என்
வாழ்வில் மட்டும்
வந்து நீயே
நானாய் மாறாமல்
விலகிச் செல்கிறாய் ?
சற்று எட்டிப் பார்
உடைந்துபோன
என் மனத் துகள்களை....
ஒவ்வொரு துகள்களும்
உன் பெயரை
உச்சரிப்பதை
செவிமடுத்துப் பார் ...
துகள்களை
ஒன்றாய் சேர்த்து
ஓரிதயமாய்
வடிவமைத்துவிட
உன்னால் 
மட்டுமே முடியும் ...
ஆதலால்
அன்பே வந்துவிடு ...!


சம்மதமென்று நீ
தலையசைக்கிறாய்
என்றெண்ணி
சங்கதியை என்
தோழியிடம்
செப்பி வைத்தேன்..
பின்னர்தான்
நானறிந்தேன் - நீ
தலையசைத்தது
என் தோழிக்கென்று ,,,
வாய் திறந்தோர்
வார்த்தை நீ
இயம்பியிருந்தால் ,
புரிந்து கொள்ளாமலா
போயிருப்பேன்
என் விதி
இதுவென்று ,....?

சிறகிழந்த
வண்ணக் கிளி
எழுந்து வானில்
வட்டமிட
ஆசை கொள்வதும்
இவள்
சுதந்திரமாய்
வாழ நினைப்பதும்
ஒன்றுதான் ..
ஏனெனில்
இரண்டுமே
நிகழ முடியா
நிராசைகளே.

அந்த நிலா கூட
நம்மை ஏமாற்றும்
ஓர் நாள்
அமாவாசையாய்
நல்ல நட்பும் 
அப்படித்தான்
சில வேளை நம்மை
நம்ப வைத்துக்
கழுத்தறுக்கும்
எதிலும் கவனம் !

இது வரை இழந்தவை
இப்போது இழந்தது
இனி இழக்கப்போவது
என்று கூட்டி கழித்து
கணக்கு பார்த்தால்
இனி இழக்க
எந்த சந்தோசமும்
பாக்கியில்லை என
என் calculator
சொல்கிறது
நீ என்ன சொல்கிறாய் 1
என்னுயிரே ?

என் 
நினைவுகளில் நீ
இல்லாத 
செக்கன்கள் கூட
இல்லையென்று 
சொல்லி
காலமெலாம் 
நினைத்தே
கண்ணீர் சிந்த வைத்த
என் அன்பு நாயகனே !
நீ சொன்ன 
வார்த்தைகள்
என் மனத்தில் இனிய
ராகமாய் 
ஒலித்த போதும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்துவதை
நீ உணர 
மறுத்(றந்)ததென்ன?
காலமெல்லாம்
ஒன்றி வாழ்வோம்
சந்தோசமின்றி 
வேறேதும் என்னால்
நீ காண மாட்டாய்
என்றெல்லாம் 
உறுதியாய்
சொன்ன நீ இன்று
வேறொருத்தி 
கை கோர்த்து
என் முன்னே
வலம் வரும் போது
என்னிதயம் துடிப்பது
புரியலையா?
இதயத்துக்குள் 
நீ மட்டும்
இருக்கிறாயென
சொல்லிப்போன
உனக்கு நிஜமாகவே
இதயமிருக்கிறதா ...
சொல்லிவிடு
என்னுயிரே....!
உனக்கு 
சொந்தமான
என்னிதயம் 

மட்டும்
இறக்கும் 

தருவாயிலும்
இழக்காது 

உன்
நினைவுகளை 

மட்டும்

அன்பே ...
உன்னோடு பேச
ஆவலாய் வந்தேன்
ஏனடா எனைக்
கொள்ளாமல் கொன்றாய்?
செத்துவிடு என
நீயுரதிருந்தால்
உடனே மாண்டிருப்பேன்
பேசாதே என என்னிடம்
சத்தியம் வாங்கி
சத்தியமாய் எனை
கொன்றுவிட்டாயே !
சாவார்க்கு வேதனை
ஒரு தடவைதான் ..
உன்னோடு நானும்
பேசாதிருந்தால் ..
ஒவ்வொரு செக்கனும்
மரண வேதனையை
உணர்கிறேனே...நிதமும்
இறக்கிறேனே ...நீ
பேசாதிருந்தால்
நிஜமாகவே நானும்
மாண்டு போவேனே ...
என்னுயிரே எனை
ஏனடா கொள்கிறாய் ?
பேசிவிடு நீயும் நான்
மரணிக்கும் முன் ..
என் ஆத்மாவேனும்
சாந்தி பெரும்!

FB யில் நீ
இல்லாத போது
உன் Message
தாமதிக்கும் போது
Phone பண்ண
சுணங்கும் போது
என்
தனிமையின் போது
கண்கள்
கலங்குகின்றன
காரணம்
i miss you
ஆனாலும்
அன்பே இப்போது
பயம் தொற்றிவிட்டது
நிரந்தரமாகவே நான்
என்னுயிரை
வாழ்நாள் முழுதும்
miss பண்ணி
விடுவேனோ என்று
அன்பே வந்துவிடு
நீயின்றி
எனக்கு வேண்டாம்
இந்த ஜகம்.. நீயில்லாத
second கள் கூட
எனக்கு ஆயிரம் யுகம்..
சிட்டுக் குருவியென
சுதந்திரமாய் பறந்தேன்
அது ஒரு காலம்
புத்தகப் பை
முதுகில் கணக்க
சுமையுடன் நடந்தேன்
அது ஒரு காலம்
நெஞ்சு நிறைய 

காதலைச் சுமந்து
இன்பம் துன்பம் என
இரண்டையும் 

மாறி மாறி அ
னுபவித்தேன்
அது சில காலம்...
ஆனால் 

இவை யாவும்
இறந்த காலம்
ஒளடதச் சாலையும்
ஒளடதப் 

பொட்டலமுமாய்
நடக்கிறேன்.. 

இது தான்
என் நிகழ காலம்
காலன் எனை 

அழைக்கிறான் .. 
தினங்களை நான்
கணக்கிடுகிறேன் ..
எண்ணி முடியும்
நாள் வெகு
தொலைவிலில்லை
ஆகவே இதுவே என்
நிகழ காலம் ,,,,

சங்கதி சொல்ல
வந்தேன்..
சந்தோசமாய்
உன்னிடம்.. சங்கதி
ஒன்று சொல்லப்
போகிறேன்
சங்கடப் படாதே என
சர்வ சாதாரணமாய்
நிச்சயித்துவிட்டனர்
என்
வீட்டார் எனக்கோர்
பெண்ணை.. என்னை
மன்னித்து மறந்திடு
என மூச்சிரைக்க
சொல்லி முடித்துவிட்டு
என் பதிலையும்
எதிர் பாராமல்.. நான்
சொல்ல வந்ததையும்
கேளாமல் ...நைசாய்
நீயும் நழுவுவத்தைப்
பார்த்து ஒரு கணம்
திகைத்து நின்றேன் ..
நீ திரும்பிப் பாராமல்
வேகத்தை ...

நெஞ்சு நிறைய
காதலுடன்
விழிகளில் கனவுகள்
பலவும் சுமந்து
காயங்கள் பல தாங்கி
காத்திருக்கிறேன் ...
ரணங்களுக்கு
ஒளடதமாய்
என்றோ ஓர் நாள்
நீ வருவாயென ...
வந்துவிடு
காத்திருப்பேன்
ப்ராணம் உள்ளவரை