
என்னை விட்டும்
பிரிந்த அந்தநாள்
இன்றும் மறக்கவில்லை..
கை பிடித்தென்னை
அழைத்துச் சென்று
வகுப்பறைக்குள் விட்டு
கண் கலங்க
அம்மா திரும்பிட
நானும் அம்மாவுடன்
செல்ல அடம்பிடித்த
அந்த நொடிகள்
இன்றும் என்னிதயத்துள்
பசுமரத்தாணியாய்....
அன்று முழுவதும்
வீடு செல்லவே
அழுதிட
ஆறுதல் சொல்லி
எண்சட்டத்தை
கையில் தந்து நல்ல
பிள்ளை நீ அழாமல்
விளையாடம்மா என
சமாதானப்படுத்திய
அன்பு ஆசிரியை.. ம்ஹ்ம் ...
மறக்குமோ நெஞ்சம்
மழலைப் பருவமதை...
இரண்டொரு தினங்களில்
நல்ல பிள்ளையாய்
பள்ளி சென்றே
நலமாய்க் கற்று
நல்லொழுக்கம் பேணி
உயர்தரமும் முடித்து
வெளியேறி காலங்கள்
கடந்த பின்னும்
மீண்டும் பள்ளி செல்லும்
அவா மட்டும் இன்னும்
மாறாமல்..
கடந்துவிட்ட
காலமெண்ணி இன்றும்
விழியோரம்
கண்ணீர்த் துளிகள் ...
No comments:
Post a Comment