என்னை நேசிக்கும்
என்னிடம்
அன்பு வைக்கும்
யாவரிடமும்
சண்டையிட்டே
பிரிந்துவிடுகிறேன் ...
மனதில்
அன்பில்லாமலல்ல ...
என்னை
நேசிப்பவர் யாரும்
நிலையாய்
நிரந்தரமாய்
இருந்ததில்லை
இதுவரை
பழகிப் பிரியும் முன்னே
விலகிக் கொள்கிறேன்
பழகிய பின் விலகலை
தாங்கிடும்
சக்தியற்றவளாய்